2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து மொழிகளில் பிரம்மானடமாக வெளியான படம் கே.ஜி.எஃப். வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓட, கே.ஜி.எஃப் 2 படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங்கானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் வருகிற அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் கே.ஜி.எஃப் 2 ரிலீஸாக இருப்பதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகச் சமீபத்தில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் இதுகுறித்து இப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா சமூகவலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளதார். அதில்... ''கே.ஜி.எஃப் 2 டீசர் எந்த நேரத்திலும் வெளியாகாது. ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் டிரைலர் பிரமாண்டமாக வெளியாகும். எனவே வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். எல்லோரும் சேர்ந்து முன்னேறலாம்'' எனக் கூறியுள்ளார்.