Advertisment

‘கே.ஜி.எஃப் - 2’ டீஸர் குறித்து தயாரிப்பாளர்!

kgf 2

கடந்த 2018 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான படம், 'கே.ஜி.எஃப்'. இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓட, 'கே.ஜி.எஃப் 2' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எகிறியது.

Advertisment

தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங்கானது முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், வருகிற அக்டோபர் 23- ஆம் தேதி உலகம் முழுவதும் 'கே.ஜி.எஃப் - 2' ரிலீஸாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அடுத்த வருடம்தான் ரிலீஸ் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்ட பின் இந்தப் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதியில் பெங்களூரில் உள்ள கான்டிராவா ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டது.

இந்நிலையில் இப்படம் குறித்து அப்டேட் விடுங்கள் என்று ரசிகர் ஒருவர் இப்படத்தின் தயாரிப்பாளரிடம் சமூக வலைதளத்தில் கேட்டார். அதற்குப் பதிலளித்துள்ள அந்தத் தயாரிப்பாளர், “டீஸரை இப்போதே வெளியிட்டால், நீங்கள் அடுத்த அப்டேட்டை கேட்பீர்கள். அதனால் யஷ் பிறந்த நாளின்போது அப்டேட் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

kgf 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe