கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kgf_2.jpg)
கடந்த வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப். கன்னட மொழிப் படமான இது, ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
கன்னட சினிமாவிலிருந்து இத்தனை எதிர்பார்புகளுடன் வெளியான இப்படம் அனைத்து மொழி பேசும் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கன்னட சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
பாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு இப்படத்திற்கு இருந்தது, ஷாரூக் கானின் ஜீரோ படத்தை விட வெற்றிகரமாக ஓடியதன் மூலம் தெரிந்தது. தற்போது கேஜிஎஃப் -2 எப்போது வரும், ஷூட்டிங் தொடங்கப்பட்டதா போன்ற பல கேள்விகள் எழுந்தது. கடந்த மே மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. அதை தெரிவிக்க படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டது படக்குழு. அந்த புகைப்படத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் அமர்ந்துகொண்டு படப்பிடிப்பை மேற்பார்வை இடுவது போல் இருந்தது.
இரண்டாவது பாகத்தில் ஆதிரா என்றொரு கதாபாத்திரம்தான் வில்லன். அந்த கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தை நடிக்க வைக்க படக்குழு அனுகுவதாக முன்னம் தகவல் வெளியானது.
இந்நிலையில் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் தான் நடிக்கிறார் என்று படக்குழு சஞ்சய் தத்தின் பிறந்தநாள் அன்று அறிவித்தது.
தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகும் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. இந்நிலையில் கோலார் தங்க வயல் அருகே திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கபபடுவதாக வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)