style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஹோம்பேல் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில், கன்னட நாயகன் ராக்கிங் ஸ்டார் யாஷ் நாயகனாக நடித்து, கன்னடத்தில் ரூ.80 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவான படம் 'கே.ஜி.எஃப்'. பிராஷாந்த் நீள் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்தார். மேலும் வசிஸ்டா என்.சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாறும் படைத்தது. இதையடுத்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'கே.ஜி.எஃப்' இரண்டாம் பாகம் படம் பூஜையுடன் நேற்று ஆரம்பமானது. இதில் படக்குழுவை சேர்ந்த பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.