கரோனாவால் 'கே.ஜி.எஃப் 2' பட ரிலீஸ் தள்ளிபோகிறதா..?

gdgg

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான படம் கே.ஜி.எஃப். இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓட, 'கே.ஜி.எஃப் 2' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எகிறியது. தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங்கானது முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் கரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், வருகிற அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் கே.ஜி.எஃப் 2 ரிலீஸாக இருப்பதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் இரண்டு சண்டைகாட்சிகள் மட்டும் மீதம் உள்ளதால் அதை கரோனா ஊரடங்கிற்கு பிறகு படமாக்க,படக்குழு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முன்பை விட விரைவாக முடித்து, வரும் அக்டோபர் 23-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' படத்தை கண்டிப்பாக ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

kgf 2
இதையும் படியுங்கள்
Subscribe