/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Es5pqfoVgAcblec.jpg)
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து,இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியான படத்தின் டீசர், படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படம் இந்தாண்டு ஜூலை 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தகவலையடுத்து உற்சாகமான ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)