2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து மொழிகளில் பிரம்மானடமாக வெளியான படம் கே.ஜி.எஃப். வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓட, கே.ஜி.எஃப் 2 படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ஆர்.ஆர்.ஆர் படமும் வெளியாகும் ஜனவரி 8ஆம் தேதி அன்றே கே.ஜி.எஃப் 2 வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இந்த வதந்தியானது சமூக வலைதளங்களில் தீயாக பரவ, ஒரே நாளில் ரிலீஸாகவில்லை என்று யஷ் தெரிவித்தார்.
இந்நிலையில் கே.ஜி.எஃப் 2 படத்தின் ரிலீஸ் செய்தியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருகிற அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் கே.ஜி.எஃப் 2 ரிலீஸாக இருப்பதாக தெரிவித்துள்ளது.