கடந்த ஆண்டு கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் ஐந்து மொழிகளில் வெளியான படம் கே.ஜி.எஃப்: சாப்டர் 1. இந்த படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றது. சிலர் இந்த படத்தை விமர்சித்தாலும் பெரும்பாலானவர்கள் இதை பாகுபலிக்கு இணையாகவே ஒப்பிட்டு பேசினார்கள். நடிகர் யஷ்க்கு கன்னட சினிமாவை தாண்டியும், இப்படத்தால் நல்ல மார்கெட் உருவாகியுள்ளது. பாலிவுட்டில் சுமார் 1500 திரையில் வெளியிடப்பட்ட கே.ஜி.எஃப், ஷாருக்கின் ஜீரோ படத்துடன் மோதி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பலர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க ஆசைப்படுபவர்களுக்கு ஒரு ஆடிஷன் ஒன்றை ஏற்பாடு செய்தது படக்குழு. சிறிய ரோல்களுக்கான ஆடிஷனை நேற்று பெங்களூருவில் உள்ள ஜிஎம் ரிஜாய்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆடிஷனில் கலந்துகொள்வதற்காக பலரும் கலந்துகொண்டனர். ஹோட்டல் வாசலில் அரை கிமீ தூரத்திற்கு கியூவ் நின்றிருந்தது.
கன்னடத்தை தாண்டி இந்த படத்திற்கு மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதால் ஆடிஷனில் கலந்துகொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துகொண்டுள்ளனர். சில மாணவர்கள் பள்ளியை கட்டடித்தும் கலந்திருக்கின்றனர். படக்குழு 8 முதல் 16 வயது வரை சிறுவர்களுக்கும், 25 வயதுக்குமேலும் நடிப்பதற்கு ஆடிஷன் நடைபெறுவதாக அறிவித்திருந்தது. நேற்று நடைபெற்ற இந்த ஆடிஷனுக்காக காலை ஆறு மணியில் இருந்து ரசிகர்கள் காத்திருந்திருக்கின்றனர். ஒரு நிமிடம் சொந்த வசனத்தை தாங்களே உருவாக்கி பேச வேண்டும் என்று படக்குழு அந்த போஸ்டரில் அறிவித்திருந்தது.
இரண்டாம் பாகத்தை மேலும் பெரிதாக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை வில்லனாக நடிக்க படக்குழு அணுகுகிறது என்று தகவல் வெளியாகிறது.