Advertisment

'அவதார் 2' வெளியாவதில் சிக்கல் - வருத்தத்தில் ரசிகர்கள்

Kerala theatre owners not to screen James Cameron’s Avatar 2

Advertisment

உலகப் புகழ் பெற்ற 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் புதிய ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 3டி-யில் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாகத் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கேரள திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பினர்(FEUOK), 'அவதார் 2' படத்தை திரையிடப் போவதில்லை என முடிவெடுத்துள்ளனர். அவதார் 2 விநியோகஸ்தர்கள் கேரளாவில் வெளியான முதல் வாரத்தில் 60% வருவாயைக் கேட்கிறார்களாம். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் வழக்கமாக 55% தான் கொடுப்போம், அதைத்தாண்டி கொடுத்தால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். அதனால் அவர்கள் கேட்பதைக் கொடுக்கத்தயாராக இல்லை எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் (FEUOK) அமைப்பு, 'அவதார் 2' திரைப்படம்தங்கள் அமைப்பின் கீழ் உள்ள 400 திரையரங்குகளில் திரையிடப்படாது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சிக்கல் தொடர்பாக கேரள திரையரங்க உரிமையாளர்களின் கூட்டமைப்பு, ஹாலிவுட் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தையைஎதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது அந்த மாநில ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

avatar 2 james cameron Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe