ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் சர்ச்சைக்குள்ளான படம்

the kerala story ott update

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இந்தி படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் இப்படம் இருப்பதாக சர்ச்சையானது.

தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன. மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். ஆனால் பல எதிர்ப்புகளுக்குமத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது.

இதையடுத்து படம் வெளியாகி பல மாதங்கள் கழித்து இப்படம் ஓடிடியில் வெளியாகவில்லை. பல முன்னணி நிறுவனங்கள், இப்படத்தை வாங்க தயக்கம் காட்டி வருவதாகத்தகவல் வெளியானது. மேலும் ஒரு முன்னணி நிறுவனம் இப்படத்தின் கதைக்கரு மற்றும் ஏற்கனவே கிளப்பிய சர்ச்சை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி வாங்க மறுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 16 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

the kerala story zee5 Tamil
இதையும் படியுங்கள்
Subscribe