The Kerala Story ott issue

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகசர்ச்சையைக் கிளப்பியது.

Advertisment

தமிழகத்தில் இந்த படத்திற்குதொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரளாஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன. மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 238 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாவதில் சிக்கலை சந்தித்து வருகிறது. அதில் ஒரு முன்னணி நிறுவனம், இப்படத்தின் கதைக்கரு மற்றும் ஏற்கனவே கிளப்பிய சர்ச்சை உள்ளிட்டவற்றைகாரணம்காட்டி வாங்க மறுத்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும்இப்படத்தை வாங்க தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஓடிடியில் வெளியாகாதது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், "இப்படத்தை வெளியிட சரியான ஓடிடி தளம் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதற்காக காத்திருக்கிறோம். எங்களின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி திரையுலகின் பல பிரிவினரை எரிச்சலடையச் செய்துள்ளது. அதனால் எங்களைத் தண்டிக்கத் திரையுலகம் சதி செய்திருப்பதாகத்தெரிகிறது. அதற்காக ஒரு பிரிவினர் வேலை செய்கிறார்கள் எனஎண்ணுகிறோம்" எனப் புலம்பியுள்ளார்.