kerala

தேசிய ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் உள்ளது. இதனால் மக்கள் கூடாமல் தடுப்பதற்காக ஐம்பது நாட்கள் வரை மதுக்கடைகள் திறக்காமல் இருந்தனர். இதனைத்தொடர்ந்து கேரளாவைத் தவிர்த்து ஒவ்வொரு மாநிலங்களாக மதுக்கடைகளைத் திறந்தனர்.

Advertisment

Advertisment

கேரளாவில் மது கிடைக்காமல் இருப்பதைப் பயன்படுத்தி கள்ளச் சாராயத்தின் விநியோகம் அதிகரித்துள்ளது. அதை போலீஸார் தனிப்படை அமைத்து, அவர்களைக் கண்டுபிடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மலையாள டிவி நடிகை மஞ்சு சினி (42 வயது) என்பவர் வீட்டிலேய தனது 4 ஆவது கணவருடன் சாராயம் விற்றதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்யன்கோடு போலீஸாருக்குத் தகவல் கிடைத்து மஞ்சு சினிவீட்டில் சோதனையிட்டபோது, ரூ.10,000 மதிப்பிலான 75 லிட்டர் சாராயம், அதை உருவாக்க பயன்படும் உபகரனங்களும் பிடிப்பட்டுள்ளது.

மஞ்சு சினியின் கணவர் விஷாக் (28 வயது) மீது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொலை வழக்கு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. லாக்டவுன் காரணமாக சினிமாத்துறை முடங்கியிருப்பதால், பணத்திற்காக இந்தத் தொழிலைச் செய்ததாக போலீஸ் விசாரணையில் மஞ்சு சினி தெரிவித்துள்ளார்.