உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் வீட்டிலேயே இருந்துவருகின்றனர்.

Advertisment

gdg

இந்நிலையில் ஊரடங்கு முடிந்து மீண்டும் பணிகள் தொடங்கும்போது, நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் 50% குறைவாகசம்பளம் பெற வேண்டும் என்ற கேரள தயாரிப்பாளர் சங்கம் கோரியுள்ளது. மேலும், எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது கேள்வி குறியாக இருப்பதாலும், ஊரடங்கு முடிந்து திரைத்துறை பாதிப்பிலிருந்து மீள வேண்டும் என்றால் நடிகர்களும், கலைஞர்களும் அவர்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும். பேருக்குக் குறைப்பதாக இல்லாமல் குறைந்தது 50 சதவீத சம்பளத்தைகுறைத்துக் கொள்ள வேண்டும் என கேரள தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.