“32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” - படக்குழு மீது வழக்குப்பதிவு

kerala police filed case against 'the kerala story' movie teaser issue

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தி கேரளா ஸ்டோரி’.இப்படத்தில் அதா சர்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனைத்தொடர்ந்து பிரபுதேவாநடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின் 2' படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததின்மூலம் நடிப்பில்அறிமுகமானார்.

'தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த டீசரில் ஹிஜாப் அணிந்து வரும் ஒரு பெண், தான் பிற மதத்திற்கு மாற்றப்பட்டுஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தள்ளப்பட்டுள்ளேன். இதே போல் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக அந்தப் பெண் தெரிவிக்கிறார். இந்த டீசர் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதனைத்தொடர்ந்து இப்படத்தில் தவறானதகவல்களைப் பரப்புகிறார்கள் எனக் கூறி கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரும், கேரள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான வி.டி.சதீசன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நானும் அந்த டீசரைப் பார்த்தேன். அதில் சொல்லப்பட்டுள்ளகருத்துகள் முற்றிலும் தவறானவை. கேரளாவில் அதுபோல எதுவும் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களின்முன்கேரள மாநிலத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இது உள்ளது. வெறுப்புணர்வு பரப்பும் வகையில் உள்ள இதனைத்தடை செய்ய வேண்டும்" எனப் பேசினார்.

இந்நிலையில், கேரள மாநில டிஜிபி ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு மீது வழக்குப் பதிவு செய்யுமாறு திருவனந்தபுரம் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார். இப்படத்தில் கேரளாவைப் பயங்கரவாதிகளின் இருப்பிடம் போல் சித்தரித்துள்ளதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

complaint Kerala mollywood
இதையும் படியுங்கள்
Subscribe