athiya shetty

Advertisment

கேரளா மாநிலத்திலுள்ள பாலக்காடு பகுதியில்காட்டு யானை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் பட்டாசு வைக்கப்பட்ட பைனாப்பிளை கொடுத்துள்ளார். இதைச் சாப்பிட்டயானையின் வாய் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அதனால் வேறு உணவை உட்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறது. வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாதயானை அருகே உள்ள ஆற்று நீரில்இறங்கி, உயிரிழந்துள்ளது. பின்னர் வனத்துறையினரால் அந்த யானை கைப்பற்றப்பட்டு, காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளது.

அந்த யானையை உடல் கூறாய்வு செய்த மருத்துவர்களுக்கு, யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தைஉருவாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில்பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டி தனது ட்விட்டரில், ''இது கண்டிப்பாக காட்டுமிராண்டித் தனம். இவர்களுக்கு இந்தக் காரியத்தைச் செய்ய எப்படி மனம் வருகிறது? பீட்டா இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்'' என்று கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.