/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/33_74.jpg)
மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள '2018' படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம் 4 நாட்களில் ரூ. 30 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக படக்குழு குறிப்பிடப்பட்டிருந்தது.
கேரளாவில் வெள்ளம் வந்த போது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விரிவாக படத்தில் பேசப்பட்டிருக்கிறது. இப்படம் தற்போது மலையாளத்திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் தவறான தகவல்களை காண்பித்திருப்பதாக கேரள அறிவு பொருளாதார இயக்கத்தின் இயக்குநர் பி.எஸ்.ஸ்ரீகலாதெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், "மாநிலத்தை அழித்த வெள்ளப்பெருக்கு குறித்து இயக்குநர் போதிய ஆய்வு செய்யவில்லை. இந்தப் படத்தில்கேரள முதல்வரை உதவியற்றவராகக் காட்டியுள்ளனர். ஆனால், உண்மை அதுவல்ல. இந்தப் படம் இயக்குநரின் குற்ற உணர்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார். 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு அணையைத் திறந்ததுதான் காரணம் என்றவிஞ்ஞானப்பூர்வமற்ற கணிப்பில் இருந்துதான் குற்ற உணர்வு வரவேண்டும்" எனக்குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)