corona

கரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளையும், இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. பல தொழில்கள் முடங்கியுள்ளன. குறிப்பாக, சினிமாத்துறையில் கடந்த மூன்று மாதங்களாகவே உலகம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனை அடுத்து இன்றிலிருந்து பல விஷயங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது கேரள அரசு.

Advertisment

அந்த வகையில் இன்று முதல் சினிமா இறுதிக்கட்ட பணிகளுக்கான வேலைகளைத் தொடங்கலாம் என்று கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

கேரள அரசின் பண்பாடு மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், அதிகபட்சம் 5 நபர்கள் தேவைப்படும் திரைப்படப் பணிகளை மே 4 முதல் தொடங்கலாம். முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவு சனிக்கிழமை எடுக்கப்பட்டது என்றார்.

Advertisment