Advertisment

'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்' - கவனம் ஈர்க்கும் டீசர்

Kerala Crime Files teaser out

மலையாளத்தில் லால், அஜு வர்கீஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள வெப் தொடர் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்'. க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில் இந்த தொடரை ராகுல் ரிஜி நாயர் தயாரித்துள்ளார். அஹம்மது கபீர்இயக்கியுள்ள இத்தொடருக்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இத்தொடர் மலையாளம் மட்டுமல்லாதுதமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் இத்தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் லால் மற்றும் அஜு வர்கீஸ் பாத்திரங்கள் பாலியல் தொழிலாளியின் சவால் மிகுந்த கொலை வழக்கினை விசாரிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு க்ளூ, ஒரு பெயர் மற்றும் லாட்ஜின் லெட்ஜரில் பொறிக்கப்பட்ட - "ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" எனும் போலி முகவரி கிடைக்கிறது. இந்த சிக்கலான சவால் மிகுந்த வழக்கை காவல்துறையினர் எப்படி விசாரிக்கிறார்கள் என்பதை சுற்றியே இந்த சீரிஸின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இத்தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஹாட்ஸ்டார் வெளியிடும் முதல் மலையாள தொடர் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.

mollywood web series hotstar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe