/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/889_3.jpg)
கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. கோலாகல ஏற்பாடு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய விருந்து எனத்தடபுடலாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது.நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி காதலி நயன்தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரம் பிடித்தார். ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இத்திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழ் இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தைபார்க்க வந்த கேரள ஜோடி அனுமதி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். 4 மாத கர்ப்பிணியான தனது மனைவி ஸ்ருதி நயன்தாராவின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரின் ஆசையை நிறைவேற்ற கணவர்சரத் தனது மனைவியுடன் கேரளாவில் இருந்து 700 கி.மீ தூரம் பைக்கில் பயணித்துநயன்தாரா திருமணத்திற்கு வந்த நிலையில் அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)