மலையாளத் திரையுலகில் நடிகையாக வலம் வருபவர் மினுமுனீர். இவர் கடந்த ஆண்டு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து பிரபல நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து இயக்குநர் மற்றும் நடிகருமான பாலசந்திர மேனன் மீது பாலியல் தொடர்பான புகார் ஒன்றை முன்வைத்தார். ஆனால் பாலசந்திர மேனன் இந்து புகாரை திட்டவட்டமாக மறுத்திருந்திருந்தார். மேலும் இது தொடர்பாக தன் மீது குற்றம் சுமத்தும் பெண்கள் மீது காவல் நிலையத்தில் அவதூறு புகார் அளித்தார். 

Advertisment

அவர் அளித்த புகாரில், தொடர்ச்சியான நேர்காணல்கள் மூலம் தனது நற்பெயருக்கு பெண்கள் களங்கம் விளைப்பதாகவும் சமூக ஊடகங்களில் தனது புகைப்படங்களைப் பகிர்ந்து இழிவான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மினு முனீர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அவர் மீது மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மினு முனீர் கேரள உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

11

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 30ஆம் தேதி எர்ணாகுளம் சைபர் க்ரைம் போலீஸார் மினு முனீரை கைது செய்தனர். பின்பு நீதிமன்றத்தில் அவரை ஒபப்டைத்த பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி அவர் கைதான அதே நாளில் விடுவிக்கப்பட்டார்.