மலையாள திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் விஜய் பாபு. இவர்மீது கோழிக்கோட்டை சேர்ந்த நடிகை ஒருவர் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறிதன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோ எடுத்து தன்னை அடிக்கடி மிரட்டி வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த புகாரில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நடிகர் விஜய் பாபு துபாய்க்கு தப்பித்து சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படிபோலீஸ் அவருக்கு சம்மன் அனுப்பியது. வெளிநாடு சுற்றுப் பயணத்தில்இருப்பதால்தன்னால் ஆஜராக முடியாது என்றும், 19 ஆம் தேதி வரை அவகாசம் வேண்டும் எனவும் விஜய் பாபு போலீசுக்கு மெயில் அனுப்பியுள்ளார்.
இதனைஏற்க மறுத்த போலீசார் சர்வதேச போலீஸ் உதவியுடன் விஜய் பாபுவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புகாரைவாபஸ் வாங்கும் படி நடிகைக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாககூறப்படுகிறது.இது குறித்தும்விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.