உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,23,328 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,005 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,991 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜப்பான் திரையுலாக பிரபலம் கென் ஷிமுரா நேற்று இரவு இறந்தார். எழுபது வயதாகும் கென் ஷிமுரா 1972ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் திரைத்துறையில் நடித்து வருகிறார். தனது காமெடியால் பலரையும் சிரிக்கவைத்த கென் பத்து நாட்கள் கரோனாவுடன் போராடி இறந்துள்ள சம்பவம் ஜப்பானியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவால் இறந்த முதல் ஜப்பானிய பிரபலம் கென் ஷிமுரா என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.