இசையமைப்பாளராக அறிமுகமாகும் கருணாஸின் மகன்

ken karunas first film as music director Salliyargal

நடிகர் கருணாஸ் தயாரிப்பில் கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சல்லியர்கள்'. இப்படத்தில் சத்யாதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.

இந்நிலையில் இப்படத்தின் மூலம் கருணாஸின் மகனும் 'அசுரன்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவருடன் சேர்ந்து ஈஸ்வர் என்ற நபரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இது தொடர்பாக கென் கருணாஸ், "இந்தப் படத்திற்கு என் நண்பன் ஈஸ்வர்தான் மெயின் இசையமைப்பாளர். நான் அவனுக்குப்பக்க பலமாக பணியாற்றியுள்ளேன்" எனப் பேசினார். இப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

actor karunas MLA
இதையும் படியுங்கள்
Subscribe