நாளை நேரடியாக டிஜிட்டலில் வெளியாகப்போகும் 'பெண்குயின்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்’ மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'பெண்குயின்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். அனைத்துத் தரப்பினரையும் கவரும் வண்ணம் எதிர்பார்ப்பை எகிற செய்யும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ஜூன் 8ஆம் தேதி வெளியாகி பலரை கவர்ந்தது. இந்தப் படத்தின் டீஸரை நடிகைகள் த்ரிஷா, சமந்தா, மஞ்சு வாரியர் மற்றும் டாப்சீ ஆகியோர் தனித்தனியாக வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்தப் படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படம் நாளை அமேசான் ப்ரைமில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இது தமிழிழில் நேரடியாக வெளியாகும் இரண்டாவது படமாகும்.