Keerthy Suresh

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தன்னுடைய திரையுலகப் பயணத்தில் 11 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டிரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "11 ஆண்டுகால சிறந்த திரைப்பயணத்திற்கு வாழ்த்துகள் சமந்தா. தனிநபராகவும், தொழில்முனைவோராகவும், நடிகையாகவும் நீங்கள் கண்ட வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றிகள் நிறைந்த ஆண்டுகள் இனியும் அமைய வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment