தெலுங்கு பட துறையில் கேஸ்டிங் கௌச் நடப்பதாக பல முன்னணி நடிகர்களின் மீது குற்றச்சாட்டு வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. இதற்காக அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

sri reddy

தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலுள்ள ஏ.ஆர். முருகதாஸ், ராகவா லாரன்ஸ் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் மீதும் குற்றச்சாட்டை வைத்தார் இவர். சமீபத்தில் விஷால் குறித்து பரபரப்பு குற்றச்சாடுகளை முன்வைத்திருந்த, ஸ்ரீரெட்டி தற்போது கீர்த்தி சுரேஷை தனது ஃபேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisment

அந்தப் பதிவில், “நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம். நான் உட்பட யாராலும் கீர்த்தி சுரேஷை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னிடம் பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையைக் குறைத்ததற்குப் பின்னர் நோயாளி போல் இருக்கிறார். அவர் நடித்த மகாநதி படம் இயக்குநரால் மட்டுமே சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல. தற்போது சாய் பல்லவி மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

Advertisment