"திருப்பதியில் இருக்கேன்..." - கிண்டலடித்த கீர்த்தி சுரேஷ்

keerthy suresh visit Tirupati temple

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும்கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது தெலுங்கில் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'தசரா' படத்தில் நடித்தார். இதையடுத்து வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'போலாசங்கர்' படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாகநடிக்கிறார். தமிழில் உதயநிதியின் 'மாமன்னன்' மற்றும் ஜெயம் ரவியின் 'சைரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஹொம்பாலே நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படமான 'ரகு தாத்தா' படத்திலும்சந்துரு இயக்கும் 'ரிவால்வர்ரீட்டா' படத்திலும்முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் திருப்பதி கோவிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார் கீர்த்தி சுரேஷ். அவரைபார்த்ததும் ரசிகர்கள் அவரைசூழ்ந்து கொண்டனர். மேலும் அவருடன் புகைப்படம் எடுக்க அலைமோதினர். அக்கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "4, 5 படம் ரிலீஸாகவுள்ளது. அதனைமுன்னிட்டு இங்கு வந்துள்ளேன்" என்றார். பின்பு திடீரெனதெலுங்கில் பேசத்தொடங்கியகீர்த்தி, தனது அக்காகுறும்படம்எடுத்துள்ளதாகவும் அவருக்காகவும் வந்துள்ளதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர் தமிழில் பேசச் சொல்லி கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், "திருப்பதியில் இருக்கேன்" எனக் கிண்டலாகப் பதிலளித்தார்.

keerthy suresh
இதையும் படியுங்கள்
Subscribe