keerthy suresh varun dhawan auto ride video viral on social media

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'தெறி'. அட்லீ இயக்கியிருந்த இப்படத்தை தாணு தயாரித்திருந்த நிலையில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். தமிழில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அதே ஆண்டு இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியானது. இதில் ஷாருக்கான், ரோஹித் ஷெட்டியிடம் பேச்சு வார்த்தை நடந்தது. பின்பு கைவிடப்பட்டது.

Advertisment

இதையடுத்து கடந்த 2 வருடங்களாக இப்படத்தில் வருண் தவான் நடிப்பதாக தற்போது வரை தகவல் இருந்து கொண்டே வருகிறது. அண்மையில் அட்லீ தயாரிப்பில் ‘கீ’ படத்தை இயக்கிய காளீஸ் இயக்கத்தில் வருண் தவான் கூட்டணி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படம் அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக்காக உருவாவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கீர்த்தி சுரேஷ் சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் வருண் தவானும், கீர்த்தி சுரேஷும் மும்பையில் ஒரு ஆட்டோவில் பயணிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கடந்த ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியான நிலையில் தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிகிறது.