Published on 16/05/2018 | Edited on 17/05/2018


சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த 'நடிகையர் திலகம்' மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து இவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த கீர்த்தி நிருபர்களிடம் பேசியபோது..."‘நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான 'நடிகையர் திலகம்' படத்தில் நடித்தது அதிர்ஷ்டமாகவும் பெருமையாகவும் உள்ளது. இத்திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மற்றும் திரைப்படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நடிகை ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவில்லை. இனி இது போன்ற சுயசரிதை படங்களில் நடிக்க மாட்டேன்" என்றார்.