Skip to main content

'நோ சொன்னதால் பட வாய்ப்புகள் கைநழுவி போய்விட்டன' - கீர்த்தி சுரேஷ் 

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
keerthy suresh

 

 

 

நடிகையர் திலகம் வெற்றிக்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய், விக்ரம், விஷால் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்ற நிலையில் தன் சினிமா வாய்ப்புகள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில்.... "திரையுலகில் என்னை விட அழகும், திறமையும் உள்ள நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைவதற்கு எனது அதிர்ஷ்டம் தான் காரணம். அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதேநேரம் திறமையும் முக்கியம். சாவித்திரி வாழ்க்கை கதை படத்தில் நடித்த பிறகு அழுத்தமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். கதைகள் கேட்கும்போது இதில் நடிக்கலாம் என்று மனது சொன்னால் அதை ஏற்கிறேன். முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. அதுபோன்ற காட்சிகளுடன் எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றதால் அந்த பட வாய்ப்புகள் கைநழுவி போய்விட்டன. எனக்கு சவுகரியமாக இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு தேவையாக இருந்தாலும் சம்மதிக்க மாட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. முத்த காட்சிகளில் என்னால் சகஜமாக நடிக்க முடியாது" என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''யாருங்க சொன்னா, நான் இதுக்காகத்தான் அப்படி செஞ்சேன்னு'' - கீர்த்தி சுரேஷ் விளக்கம்

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

66வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ''மகாநதி (நடிகையர் திலகம்)'' படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றார். இவருக்கு பல்வேறு தரப்பிலுருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் இவர் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், தன் உடல் எடை மெலிவு குறித்தும் நேற்று அளித்த ஒரு பேட்டியில் பேசியபோது....  

 

keerthy suresh

 

 

''எனக்கு தேசிய விருது கிடைத்ததற்காக பாராட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் 'நடிகையர் திலகம்' படம் முடித்த பின் ஒரு 5 மாதம் ஓய்வில் இருந்தேன். அந்த சமயம் என்னை பலரும் ஏன் குண்டாக இருக்கிறாய், சப்பியாக இருக்கிறாய் என்றெல்லாம் கேட்டார்கள். நானும் சரி இனிமேல் சில காலம் ஒர்கவுட் எல்லாம் செய்து பார்ப்போம் என ஆரம்பித்து 5, 6 மாதங்கள் உடற்பயிற்சி செய்தேன். அதன் பலன்தான் நான் இருக்கும் தற்போதைய தோற்றம். யார் கிளப்பிவிட்டாரகள் என தெரியவில்லை. நான் எந்த படத்திற்காகவும் என் உடலை குறைக்கவில்லை. சொல்லப்போனால் சில தமிழ் படங்களுக்காக என்னை அணுகிய சிலர், இன்னும் கூட வெய்ட் போட சொல்கிறார்கள்'' என்றார்.

 

Next Story

கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது ஏன்...? தேர்வுக்குழு சொன்ன அசத்தல் காரணம்!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

66வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. வருடா வருடம் இந்த விருது அறிவிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் 3ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும் ஆனால், இந்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெற்றதால் இது தள்ளிவைக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Keerthy

 

 

இதில் சிறந்த நடிகைக்கான விருதை ''மகாநதி (நடிகையர் திலகம்)'' படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் வெளியான இப்படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதை கீர்த்தி சுரேஷிற்கு வழங்கியதற்கான காரணத்தை தேர்வு குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, 'ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தின் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ற வகையில், பலவிதமான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக' இந்த தேசிய விருதை கீர்த்தி சுரேஷிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.