keerthy suresh revolver rita shoot wrapped up

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் கதாநாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் ரகு தாத்தா, கண்ணி வெடி உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே ரிவால்வர் ரீட்டா என்ற தலைப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

சந்துரு இயக்கும் இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. சமந்தா தனது சமூக வலைthதளப்பக்கத்தின் மூலம் வெளியிட்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாகநிறைவடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியதாகவும் விரைவில் டிரெய்லர் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு விரைவில் தியேட்டரில் வரவுள்ளதாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது.