keerthy suresh to pair with naga chaitanya

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் வேதாளம் படத்தின் ரீமேக்கான 'போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 11-ல்வெளியாகிறது.

Advertisment

தமிழில் உதயநிதியின் 'மாமன்னன்', ஜெயம் ரவியின் 'சைரன்' மற்றும் 'கே.ஜி.எஃப்' பட தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே தமிழில் தயாரிக்கும் முதல் படமான 'ரகு தாத்தா' படத்திலும் நடிக்கிறார். மேலும் சந்துரு இயக்கும் படத்திலும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் மாமன்னன் வருகிற 29ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடிக்கும் புது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நாகா சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் நடித்த நாக சைதன்யா அடுத்ததாக ‘கார்த்திகேயா 2’ படத்தை இயக்கிய சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக நாக சைதன்யாவோடு நடிக்கிறார். ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த மகாநதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் நடிகையர் திலகம் என்ற தலைப்பில் தமிழில் வெளியான நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.