Published on 30/03/2020 | Edited on 30/03/2020
நடிகையர் திலகம் படம் மூலம் தேசிய விருது பெற்று இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறைப்பதற்காக சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இவர் தற்போது தமிழில் பென்குயின், ரஜினியின் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் மிஸ் இந்தியா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்ததாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தானா இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இப்படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.