Advertisment

உடல்வாகு பொருந்தாததால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு!

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் மகாநடி. இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியானது.

Advertisment

keerthy

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்திருந்தார். அவருடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதின் காரணமாக இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார் கீர்த்தி சுரேஷ். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்ததற்கு தேசிய விருதும் பெற்றார்.

Advertisment

இதனை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல தமிழில் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த மைதான்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் மைதான் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷை மைதான் படக்குழு நீக்கியுள்ளது. அதற்கு காரணம் அவருடைய உடல் வாகு என்றும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “அஜய் தேவ்கானுக்கு ஜோடியாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க கீர்த்தி சுரேசை தேர்வு செய்தபோது அதற்குரிய தோற்றத்தில் இருந்தார். ஆனால் தற்போது எடை குறைந்து ஒல்லியாகி விட்டார். கீர்த்தி சுரேசை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க அவரது உடல்வாகு பொருந்தவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ajay devgan keerthy suresh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe