நடிகையர் திலகம் படம் மூலம் தேசிய விருது பெற்று இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறைப்பதற்காகச்சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.இவர் தற்போது தமிழில் பென்குயின்,ரஜினியின் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் மிஸ் இந்தியா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

fnf

Advertisment

மேலும் இவர் அடுத்ததாகத் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷின் அப்பாவான சுரேஷ்குமார் அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், பாஜகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் கீர்த்திக்கு திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ்குமார் பாஜகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.