/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/70_11.jpg)
நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். விஜய்யின் 66வது படமான இப்படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். சமீபத்தில் இப்படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கீர்த்தி சுரேஷிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக ‘பைரவா’, ‘சர்க்கார்’ ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில், இது விஜய்யுடன் அவர் இணையும் மூன்றாவது படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)