/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/440_12.jpg)
கதாநாயகியாகவும் கதையின் நாயகியாகவும் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது இந்தியில் பேபி ஜான் படத்தில் கதாநாயகியாகவும் தமிழில் கண்ணி வெடி மற்றும் ரிவால்வர் ரீட்டா படத்தில் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார். இதில் பேபி ஜான், அடுத்த மாதம் கிறுஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
சமீப காலமாக கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி கொண்டே இருக்கிறது. ஆனால், அந்த தகவலுக்கு கீர்த்தி சுரேஷ் நேரடியாக எந்த பதிலும் அளித்ததில்லை. கடந்த ஆண்டு துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஃபர்ஹான் பின் லியாகத்துடன் அவர் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர, அவரைத்தான் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் நண்பர் என திருமண தகவலுக்கு கீர்த்தி சுரேஷ் முற்றுப்புள்ளி வைத்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/439_14.jpg)
இதையடுத்து மீண்டும் அவரது நீண்ட கால காதலராக பேசப்படும் ஆண்டனி தட்டில் என்பவரை அடுத்த மாதம் 11ஆம் தேதி கரம் பிடிக்கவுள்ளதாகவும் இவர்களது திருமணம் கோவாவில் நடக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் திருமணத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளன்ப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் “15 வருடக் காதல் இப்போதும் தொடர்கிறது. எப்போதும் தொடரும்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பையும் பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us