/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tweet_4.jpg)
கடந்த 2015ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன், விஷால், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். தமிழ் மொழியைப் போலவே தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், ட்விட்டரில் தென்னிந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனம் ஆண்டின்இறுதி மாதத்தில் அந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக்குகள், அதிகம் பகிரப்பட்ட ட்வீட்டுகள் ஆகியவற்றை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், 2021ஆம் ஆண்டில் தென்னிந்திய அளவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், முதலிடத்தை கீர்த்தி சுரேஷும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பூஜா ஹெக்டே, சமந்தா இருவரும் பிடித்துள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் காஜல் அகர்வால், மாளவிகா மோகனன், ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, தமன்னா, அனுஷ்கா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் பிடித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)