
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி 'ஆச்சார்யா' என்னும் படத்தில் நடித்து வந்தார். கொரட்டல சிவா இயக்கும் இப்படம் காரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், தற்போது ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து மோகன் லால் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான லூசிஃபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார் சிரஞ்சீவி. ஆனால், சில காரணங்களால் இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போவதாக முன்னமே அறிவிக்கப்பட்டது.
'வேதாளம்' ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக லாக்டவுன் சமயத்தில் தகவல் வெளியானது. இந்த படத்தை மெஹர் ரமேஷ் இயக்க, அனில் சுக்ரா - ராம்சரண் - ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இதில் சிரஞ்சீவியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.
தமிழ் வேதாளம் படத்தில் அஜித்துக்கு அடுத்து மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக இருப்பது லக்ஷ்மி மேனன் நடித்திருந்த கதாபாத்திரம்தான். தெலுங்கில் யார் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார்கள் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார் தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.