Skip to main content

130 பேர்; மொத்தம் 75 லட்சம் ரூபாய் - படக்குழுவை நெகிழவைத்த கீர்த்தி சுரேஷ்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

keerthy suresh gifted gold coins to dasara team

 

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தசரா'. சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. படப்பிடிப்பின் இறுதி நாளில் படத்தில் பணிபுரிந்த 130 பேருக்கு படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தங்க நாணயம் வழங்கி பரிசளித்துள்ளார். அந்த தங்கக்காசு பத்து கிராம் இருக்கும் எனவும், அதன் மொத்த மதிப்பு 70 முதல் 75 லட்சம் ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பரிசினை வழங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். 

 

நடிகர், நடிகைகள் தங்களது படப்பிடிப்பு முடிந்ததும் அந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட குழுவினருக்கு பரிசுகள் அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. நயன்தாரா படப்பிடிப்பு முடிந்ததும் அந்த குழுவில் உள்ள உதவி இயக்குநர், உதவி ஒளிப்பதிவாளர், உதவி கலை இயக்குநர்களுக்கு பரிசுகள் வழங்குவாராம். இந்தப் பட்டியலில் தற்போது கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்