
பொன்னியின் செல்வன், ஜன கன மன, அகிலன் ஆகிய படங்களில் நடித்துமுடித்துள்ள ஜெயம் ரவி தற்போது அகமது இயக்கத்தில் ஒரு படம், ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்திற்கு ஜெ.ஆர் 30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ஜெயம் ரவியின் 31வது படம் குறித்த அறிவிப்பு வரும் 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அன்னாத்தை, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றிய அந்தோணி பாக்யராஜ் இயக்கவுள்ளதாகவும், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலை உறுதி செய்யும் அறிவுப்பு 29 ஆம் தேதி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.