Advertisment

பிரம்மாண்ட படம் - புதிய முயற்சி எடுத்த கீர்த்தி சுரேஷ்

keerthy suresh dubbed bujji in kalki ad 2898 movie

Advertisment

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏடி’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இப்படம் சைன்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகிறது. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து பிரபாஸின் கதாபாத்திர போஸ்டர் முன்னதாக வெளியிடப்பட்டது. அவர் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்து டீசர் வெளியிட்டிருந்தனர். இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வருகிற ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கெனவே பல முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

keerthy suresh dubbed bujji in kalki ad 2898 movie

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் புஜ்ஜி என்ற பெயரில் பிரபாஸின் நண்பனாக அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. அதோடு புஜ்ஜியின் மூளை அதன் உடல் வடிவத்துடன் கூடவே இணைந்த வித்தியாசமான உருவத்தில் உள்ளது, அதன் அறிமுக வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. பிரபாஸின் நண்பராக வரும் புஜ்ஜி, அவருக்கு நிறைய அறிவுரைகளை வழங்குகிறது. இருவருக்கும் இடையிலான நட்பை விவரிக்கும் விதமாக இந்த அறிமுக வீடியோ உருவாகியுள்ளது. இதில் சிறப்பம்சமாக புஜ்ஜி ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். இது ரசிகர்களின் வரவேற்பைபெற்று வருகிறது. மேலும் இதன் அறிமுக விழா ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் முன்பு நடந்தது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், ரகு தாத்தா, கண்ணி வெடி, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பேபி ஜான் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தில் ’புது மெட்ரோ ரயில்...’ பாடல் மூலமாக பாடகராக உருவெடுத்தார். இப்போது முதல் முறையக மற்றொரு கதாபாத்திரத்திற்கு அதுவும் ரோபோவுக்கு குரல் கொடுத்துள்ளார். இப்படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின் கீர்த்தி சுரேஷை வைத்து மகாநதி படத்தை இயக்கியவர். இந்தப் படம் கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Kalki 2898 AD movie ACTOR KAMAL HASSHAN prabhas keerthy suresh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe