/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/keerthy.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சூரி, வினய் ராய்உள்ளிட்ட பலரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை 2டி என்டர்டைன்மெண்ட்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் இந்த ஜோடி இரண்டாவது முறையாக திரையில் தோன்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)