Keerthy Suresh

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நாயகனாக நடிக்கும் படம் 'சாணிக் காயிதம்'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தில், செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.இத்தகவலை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "புதிய பயணத்தை தொடங்கியுள்ளோம், உங்கள் ஆசீர்வாதம் தேவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

'சாணிக் காயிதம்' படத்தின் மூலம் இயக்குநர் செல்வராகவன் நாயகனாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.