keerthy suresh about rdx malayalam movie

Advertisment

மலையாளத்தில் ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'ஆர்டிஎக்ஸ்'. சோபியா பால் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் இப்படத்தை பாராட்டி படக்குழுவினரை புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "மீண்டும் ஒருமுறை திரையரங்குகளில் பார்க்க விரும்பும் ஒரு பக்காவான கமர்ஷியல் படம். எமோஷன் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் அருமையாக இருந்தது. ராபர்ட், டோனி மற்றும் சேவியர் மூவரும் படத்தை தாங்கி பிடித்துள்ளார்கள். திரையில் அவர்களைப் பார்க்கும் போது தெறியாக இருந்தது.

மகிமா நம்பியார் அழகாக இருக்கிறார். நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் காட்சிகள் பின்னிட்டாங்க. சாம் சி.எஸ்ஸோட பின்னணி இசை தெறி" என குறிப்பிட்டுள்ளார்.