தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும்கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது தெலுங்கில் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'தசரா' படத்தில் நடித்தார். இதையடுத்து வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'போலாசங்கர்' படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாகநடிக்கிறார். தமிழில் உதயநிதியின் 'மாமன்னன்' மற்றும் ஜெயம் ரவியின் 'சைரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஹொம்பாலே நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படமான 'ரகு தாத்தா' படத்திலும்சந்துரு இயக்கும் 'ரிவால்வர்ரீட்டா' படத்திலும்முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமீப காலமாக கீர்த்தி சுரேஷின்திருமணம் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி கொண்டேஇருக்கிறது. ஆனால், அந்த தகவலுக்கு கீர்த்தி சுரேஷ் நேரடியாக எந்த பதிலும் அளித்ததில்லை. அண்மையில்துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஃபர்ஹான் பின் லியாகத்துடன் அவர் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். இதனைப் பார்த்த பலரும் கீர்த்தி சுரேஷ் இவரைத்தான் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறி வந்தனர். மேலும், இதுவேசெய்தியாகவும் சில ஊடகங்களில் வெளியானது. அதில் ஒரு ஊடகத்தில் 'யார் இந்தமிஸ்ட்ரி மேன்' என்ற தலைப்பில்செய்தி வெளியானது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவியநிலையில் கீர்த்தி சுரேஷ் அதற்கு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்த முறை என் அருமை நண்பரை சேர்த்து வைத்துப் பேச வேண்டாம். நேரம் வரும்போது நானே அந்த மிஸ்ட்ரி மேனை காண்பிக்கிறேன். அதுவரைகொஞ்சம் கூலாக இருக்கவும். ஒரு முறை கூட சரியாகக் கண்டுபிடிக்கவில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.