keerthy suresh about deep fake video

Advertisment

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஏஐ டீப் ஃபேக் வீடியோ, அன்மையில் இணையத்தில் வைரலாகி வந்தது. இதற்கு அமிதாப் பச்சன், மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் சர்சையான நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை, போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் போலி வீடியோ தொடர்பாகச் சமூக வலைத்தள நிறுவனங்களை எச்சரித்ததோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமல்லாது ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த ஏஐ டீப் ஃபேக் தொழில் நுட்பம் மூலம் நடிகை கத்ரீனா கைஃப்பின் புகைப்படமும் வெளியாகி வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், “டீப் ஃபேக் வீடியோ வைரலாகி வருவது பயத்தை ஏற்படுத்துகிறது. இதைச் செய்தவர், அந்த நேரத்தைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தாமல், ஏதாவது பயனுள்ள வகையில் செய்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்று நமக்கு தொழில்நுட்பம் ஒரு வரமா அல்லது சாபமா என்று புரியவில்லை. அன்பு, நேர்மறை, விழிப்புணர்வு மற்றும் தகவல்களைப் பரப்புவதற்கு மட்டுமே இந்த தளத்தை பரவலாகப் பயன்படுத்துவோம், முட்டாள்தனமாக அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.