style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
'பாகுபலி' ராஜமௌலி தற்போது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார். படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கு ‘ராம ராவண ராஜ்யம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக கூறப்படும் இப்படத்தில் ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாகவும் கூறப்படுகிறது.