நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கனா பட நடிகர் தர்ஷனுடன் இணைந்து நடித்துள்ள தும்பா படம் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நேற்று நடைபெற்ற தும்பா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கீர்த்தி பாண்டியன் கண்ணில் அழுகையுடன் நெகிழ்ந்து பேச்சைத் தொடங்கினார்.
அவர் பேசுகையில், "எனது அழகைப்பற்றியோ, எனது நிறத்தைப் பற்றியோ எதுவுமே சொல்லாமல் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார் தும்பா பட இயக்குநர்.கடந்த மூன்றரை வருடங்களாக நிறைய பேரிடம் கதை கேட்டுள்ளேன். அதில் நான் நிறைய கதைகளை தவிர்த்திருக்கிறேன். என்னை பல இயக்குநர்கள் புறக்கணித்த தருணமும் உண்டு. பெரிய இயக்குநர்கள் கலர் கம்மியாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இப்படி இருக்கும் ஹீரோயினை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று கூட சொன்னார்கள்.எனது திறமைகளை மதித்து என்மேல் நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் தும்பா படத்தின் இயக்குநர் ஹரிஷ் ராம் தான்” என்று கூறியவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.