keerthy pandian

Advertisment

'தும்பா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் ஆவார்.

மலையாளத்தில் ஹிட்டான 'ஹெலன்' என்னும் படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ள அருண் பாண்டியன், அந்த படத்தினை தமிழில் ரீமேக் செய்கிறார். கீர்த்தி பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் பல வருடங்கள் கழித்து அருண் பாண்டியனும் நடிக்கிறார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஷூட்டிங் எதுவும் நடைபெறாத நிலையில் தனது கிராமத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார் நடிகை கீர்த்தி பாண்டியன். கிராமத்தில் அவர் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றையும் வீடியோவாக பதிவிட்டும் வருகிறார்.

Advertisment

அந்த வகையில், தற்போது தனது வீட்டுக்குள் வந்த பாம்பை தனி ஒரு ஆளாக துணிச்சலாக பிடித்த கீர்த்தி பாண்டியன், அதை அடிக்காமல் பக்கெட்டில் போட்டு வெளியே கொண்டு விட்டுள்ளார். இதையும் வீடியோவாக பதிவு செய்துள்ள கீர்த்தி பாண்டியன், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.